Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை எண்ணூர் அருகே எர்ணாவூர், எரணீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த தீபா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத 6 பேர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தையும், டிரை சைக்கிளையும் திருட முயன்றது தெரியவந்தது.
இதைக் கண்டு தீபா கூச்சலிட்டார். இதையடுத்து அவரது மகன் கிருத்திக் தேவ் (25) வெளியே வந்து திருட முயன்றவர்களை தடுக்க முயன்றார்.
அப்போது குற்றவாளிகள் கல் மற்றும் சிறிய கத்தியால் தாக்கி, தாய் மற்றும் மகனை காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
தாக்குதலில் தீபாவுக்கு வலது முழங்கையில் சிறிய காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனை-யில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக தீபா எண்ணூர் காவல்
நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், எண்ணூர் எஸ்.வி.நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ் என்கிற ‘பவர் சந்தோஷ்’ மற்றும் தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த லோகேஸ்வரன் (21), ஜெயநாதன் (18), விஷ்வா (17), லோகேஷ் (17) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ