லாரி மோதி உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ₹73 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச) சென்னையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.73.62 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமலையா – கோடீஸ்
High court


சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச)

சென்னையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.73.62 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமலையா – கோடீஸ்வரி தம்பதியினர் கடந்த ஆண்டு மாதவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில், தனியார் நிறுவனம் நடத்தி வந்த கோடீஸ்வரி மீது லாரியின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துக்காக, மனைவியின் மரணத்துக்கு ரூ.99 லட்சம் இழப்பீடு கோரி, கணவர் திருமலையா சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி ஏ. நசீர் அகமது, லாரி ஓட்டுநரின் கவனக்குறைவான ஓட்டுதலே விபத்துக்கு முக்கிய காரணம் என சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கோடீஸ்வரியின் குடும்பத்தினருக்கு ரூ.73,62,800 இழப்பீட்டை, லாரிக்கு காப்பீடு செய்திருந்த ராயல் சுந்தரம் ஜெனரல் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ