Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக தனது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் வருகை தந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் முதல்வரை வரவேற்றனர்.
கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்தினருடன் முதல்வர் தங்கியுள்ளார். விடுதியில் கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை விடுதியில் இருந்து வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பழமையான முருகன் கோயில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Hindusthan Samachar / vidya.b