இஷான் கிஷன்–அபிஷேக் சர்மா அதிரடி - ராஜஸ்தானை வீழ்த்திய சன்ரைசர்ஸ்
ஜெய்ப்பூர் ,26 ஏப்ரல் (ஹி.ச.) ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி
S


ஜெய்ப்பூர் ,26 ஏப்ரல் (ஹி.ச.)

ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால்–வைபவ் சூர்யவன்சி தொடக்கமாக களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து ஜுரெல் இணைந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி, 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 76 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஜுரெலும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் அவுட்டானார்.

தொடர்ந்து சூர்யவன்சி 36 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அடுத்த பந்திலேயே அவர் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய டோனோவன் பெரேரா 33 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 7 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 228 ரன்கள் குவித்தது.

சூர்யவன்சி அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

229 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஹெட் 6 ரன்களில் அவுட்டானார்.

பின்னர் இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில், அபிஷேக் சர்மா 57 ரன்களிலும், இஷான் கிஷன் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் கிளாசன் மற்றும் நிதிஷ் குமார் அமைதியாக விளையாடி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.

18.3 ஓவர்களில் இலக்கை கடந்த சன்ரைசர்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA