Enter your Email Address to subscribe to our newsletters

பாலக்காடு , 26 ஏப்ரல் (ஹி.ச.)
பாலக்காடு மாவட்டம் விளையன்னூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (65) என்பவர், கடந்த 2024-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குழல்மண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு பாலக்காடு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சி. சிந்து தங்கமணி, குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமனுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் கூடுதல் நிதியுதவி வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA