அமித்ஷா பேச்சுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
கொல்கத்தா 26 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்துக்கு, மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்
K


கொல்கத்தா 26 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்துக்கு, மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா,

தேர்தல் காலத்தில் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கலவரக்காரர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதற்கு எதிர்வினையாற்றிய மம்தா பானர்ஜி,

மத்திய உள்துறை மந்திரி பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது தவறு.

மேலும், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

அமித்ஷாவின் இந்த கருத்து மேற்கு வங்காள அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு தேர்தல் சூழல் மேலும் பதற்றமாக மாறியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA