Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும் அங்கு மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைக்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டு வருகிறது.
இந்த நிலையில் 3வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் ரியாக்டர் எனப்படும் உலோக குளிர்விக்கும் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது சிறந்த நிலை உலைகளுக்குள் நீர் பாய்ச்சல் பணி தொடங்கியது.
இதன் மூலமாக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் முதன்மை குளிரூட்டப்பட்ட குழாய்களை தூய நீரை கொண்டு சுத்தம் செய்ததே இந்த பணிக்கு முக்கிய நோக்கமாகும் இது அடுத்த கட்டமாக செயல்பாடுகளாக அமைப்பாக தயார்படுத்தப்படும் உதவும்.
இந்திய அனுசக்தி கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிசி பதக் திறந்த உலைக்குள் நீர் பாச்சி மாற்றம் தொடங்கும் நிலவை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ரஷ்யா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர்
அணு உலையில் முதன்மை அமைப்பின் உபகரணங்கள் மற்றும் குழாய்களின் செயல்பாடுகள் தனித்தனியாக சோதனை செய்யும் பணியும் இதன் மூலமாக தொடங்கியது உள்ளது. மேலும் மூன்றாவது அணு உலை பயன்பாட்டுக்கு வருவதற்கான முக்கிய பணியை எட்டி உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணு உலை மூலமாக இதுவரை சுமார் 121 பில்லியன் யூனிட் தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலமாக சுமார் 104 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு சுற்றுச்சூழல் கலப்பதை தவிர்க்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 6 அணு உலைகள் செயல்படும்போது 6000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN