Enter your Email Address to subscribe to our newsletters

நாக்பூர், 26 ஏப்ரல் (ஹி.ச.)
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் அகில பாரதீய வித்யா பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் யஷ்வந்த்ராவ் கெல்கரின் பிறந்தநாள் விழா நாக்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் தேசபக்தியை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் எழுச்சியும் முன்னேற்றமும் எங்களது பிரதான இலட்சியமாகும்.
தேசபக்தியே எங்களது ஒவ்வொரு செயலுக்கும் உந்துசக்தியாக உள்ளது.
சமூகத்தில் ஒவ்வொரு நபரையும் ஒரு சிறந்த மனிதராக உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவகர்களின் முக்கிய பணியாகும்.
தனிமனித ஒழுக்கமும், பண்பும் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும்.
அந்த பணியைத்தான் எங்கள் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.
இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA