மேலூர் அருகே முனியாண்டி கோவில் சித்திரை திருவிழா- 150க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு அசைவ அன்னதானம்
மதுரை, 26 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டகாளைப்பட்டி பகுதியில் உள்ள வெள்ளமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில் வளாகத்தில் சித்திரை மாதத்தை முன்னிட்டு 15ஆம் ஆண்டு பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மூன்று நாட்க
அன்னதானம்


மதுரை, 26 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டகாளைப்பட்டி பகுதியில் உள்ள வெள்ளமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில் வளாகத்தில் சித்திரை மாதத்தை முன்னிட்டு 15ஆம் ஆண்டு பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி, நேற்று நள்ளிரவில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை சுவாமிக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மேலூர், வெள்ளலூர், சிவகங்கை, மலம்பட்டி, இடையமேலூர், உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதான விருந்தில் பங்கேற்றனர்.

விழாவையொட்டி கோயில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam