Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ-மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.
இந்தாண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வினை 28 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இத்தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
நீட் (NEET UG) தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தின்படி, நாளை ஏப்ரல் 27 (திங்கட்கிழமை) காலை 10:00 மணிக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் பதற்றமடையாமல் இன்றைய நாளைத் திருப்புதலுக்காகவும் (Revision) அல்லது மாதிரித் தேர்வுகளுக்காகவும் (Practice Tests) பயன்படுத்திக் கொள்ளுமாறு என்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b