நெல்லையில் தற்கொலை முயற்சி - முதியவரை காப்பாற்றிய ரயில்வே பணியாளர்
நெல்லை, 26 ஏப்ரல்(ஹி.ச.) நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பைப சாலை ரயில்வே மேம்பாலம் அருகே தற்கொலை செய்ய முயன்ற முதியவரை ரயில்வே பணியாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதையில் பராமரி
தண்டவாளம்


நெல்லை, 26 ஏப்ரல்(ஹி.ச.)

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பைப சாலை ரயில்வே மேம்பாலம் அருகே தற்கொலை செய்ய முயன்ற முதியவரை ரயில்வே பணியாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் மீனாட்சிசுந்தரம் வழக்கம்போல் தண்டவாள ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அப்போது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே, ரயில் பாதையில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்ததை கவனித்தார்.

உடனடியாக ரயில் வரும் நேரம் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர் விரைந்து சென்று அந்த முதியவரை தண்டவாளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டார்.

பின்னர் அவரிடம் பேசியபோது, தனது மகன் தாக்கியதாகவும், உணவு கூட வழங்காமல் புறக்கணித்ததாகவும் அந்த முதியவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து,

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தற்கொலை செய்ய நினைக்கக் கூடாது;

தமிழகத்தில் பல முதியோர் இல்லங்களும் உதவி செய்யும் அமைப்புகளும் உள்ளன” என்று அறிவுரை வழங்கி, அந்த முதியவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.

இந்த மனிதநேய செயலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, ரயில்வே பணியாளர் மீனாட்சிசுந்தரத்தின் செயல் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam