Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 ஏப்ரல் (ஹி.ச.)
நாடு முழுவதும் நடைபெற உள்ள 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டத்தில் வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கணக்கெடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், தேவையான விளக்கங்களை வழங்கவும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு பெற 1855 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சார்பில் வாட்ஸ்அப் உரையாடல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் அனைத்து மாநிலங்களின் பிராந்திய மொழிகளில் தகவல்களை பெறும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் எளிதில் தகவல்களை அறிந்து கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் சிரமமின்றி ஒத்துழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA