பா.ஜ.க வுக்கு தாவிய ஹர்பஜன் சிங் - வீட்டுச் சுவற்றில் ‘துரோகி’ என எழுதி ஆம் ஆத்மியினர் போராட்டம்
புதுடெல்லி , 26 ஏப்ரல் (ஹி.ச.) பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக, மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன்
D


புதுடெல்லி , 26 ஏப்ரல் (ஹி.ச.)

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக, மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார்.

அவருடன் சேர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், “கட்சி தாவிய ஏழு பேரும் துரோகிகள்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, பாஜகவில் இணைந்த மறுநாளே, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஹர்பஜன் சிங்கின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜலந்தர் நகரில் உள்ள அவரது வீட்டின் சுவர்களில் கறுப்பு மையால் ‘துரோகி’ என எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கண்களில் கறுப்பு துணி கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் ஹர்பஜன் சிங் வீட்டில் இல்லையென தகவல் தெரிவிக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA