பழனியில் யோகா மருத்துவ முகாம் - யோகா பயிற்சி செய்து நோய்களை குணமாக்குவது குறித்து ஆலோசனை
திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவாலய யோகா மையம் சார்பில் யோகா மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் கல்லீரலில் கொழுப்பு படிதல், கல் அடைப்பு ,முதுகு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு யோக
Medical Camp


திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவாலய யோகா மையம் சார்பில் யோகா மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முகாமில் கல்லீரலில் கொழுப்பு படிதல், கல் அடைப்பு ,முதுகு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு யோகா பயிற்சியின் மூலம் தீர்வு காணப்பது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை மற்றும் விளக்கம் அளித்தனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், மூச்சுப் பயிற்சி, படிக்கின்றன திரிவாசல் திரிகோர்ஆசனம் , பஜ்சிமோத்தாசனம் உள்ளிட்ட ஆசனங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமும் 10 நிமிடம் யோகாசனம் செய்வதால் நோயில்லாமல் வாழலாம் என முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் உணவு பழக்க வழக்கத்தால் உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் எளிய முறையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு யோகா பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN