பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கோவிலில் பக்தர்கள் பெரும் திரள் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளி முழு ஆண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நாள்தோறும் அதிகம
பழனி முருகன்


திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளி முழு ஆண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

நாள்தோறும் அதிகமான பக்தர்கள் வருகை தரும் இந்த திருத்தலத்தில், இன்று கூடுதல் கூட்டம் நிலவியது. மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கு நடந்து செல்லவும், படிப்பாதை வழியாக கீழிறங்கி வரவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கூட்ட நெரிசலை சமாளிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam