நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் தமிழ்நாட்டை ஆள முடியாது - செல்வப்பெருந்தகை பேட்டி
திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழக மக்கள்
செல்வப்பெருந்தகை


திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழக மக்கள் மு.க. ஸ்டாலின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதனால் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என மக்கள் தீர்ப்பு நான்காம் தேதி வெளிப்படும்.

இது முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த உழைப்பிற்கும் திட்டங்களுக்கும் மக்கள் தரும் பாராட்டாகும். கனவில் வேண்டுமானாலும் சிலர் அமைச்சரவை பட்டியலை தயாரித்துக் கொள்ளலாம்.

ஆனால் புதிதாக உருவான சக்திகள் தமிழகத்தை ஆள நினைப்பது சாத்தியமில்லை.

மேலும், திமுக கூட்டணி 40 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்றோர் மக்கள் சேவையில் ஈடுபட்டு பின்னர் அரசியலுக்கு வந்தவர்கள்; அவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.

அதே நேரத்தில், சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஒன்றிய அரசு முழுமையாக செயல்பட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இடி, வருமானவரித்துறை போன்ற மத்திய அமைப்புகள் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், தனது தொகுதியில் நடைபெற்ற சோதனை குறித்து வீடியோ ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எந்த கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்பதற்கான முழு விவரங்களையும் ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam