ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள் - தமிழிசை சௌந்தராஜன் விமர்சனம்
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 25) மதியம்சென்றடைந்தார். ஏப்ரல் 29-ம் தேதி வரை ஓய்வெடுக்கும் முதல்வர
ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள் - தமிழிசை சௌந்தராஜன் விமர்சனம்


சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று

(ஏப்ரல் 25) மதியம்சென்றடைந்தார்.

ஏப்ரல் 29-ம் தேதி வரை ஓய்வெடுக்கும் முதல்வர் ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.

இதே போல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள் என தமிழக முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்.. ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!...

வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்....

அரசியல் என்பது அனைவருக்கும் சமமே...

திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை... அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல இறக்கத்திற்காகவே... ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள்.

ஆனால் இதே கூட்டம் தான் அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள்.. புரிந்து கொள்ளுங்கள் இவர்களை..

பொதுநலம் என்று பேசிக்கொண்டு தெரியும் இந்த சுயநலவாதிகளை..

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b