திருச்சி தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண விழா கோலாகலம்
திருச்சி, 26 ஏப்ரல் (ஹி.ச.) திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்
Thayumanaswamy Temple


திருச்சி, 26 ஏப்ரல் (ஹி.ச.)

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா என நடைபெறுவதும் வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா தாயுமானசுவாமி கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது.

தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் விமர்சையாக நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவியதுடன், மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் சிவ சிவ, தாயுமான ஈசா என கோஷங்கள் எழுப்பி பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.

சித்திரைத் திருவிழாவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன் சித்ரா பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b