கோடை விடுமுறை - அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 26 ஏப்ரல் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்
Tiruvannamalai


திருவண்ணாமலை, 26 ஏப்ரல் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்கின்றனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வணங்கி, பின்னர் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN