Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
சர் பிட்டி தியாகராயரின் 175-வது பிறந்தநாள் இன்று (ஏப்.27) அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை கி. வீரமணி சந்தித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், தேர்தல் முடிவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
2006-ல் விஜயகாந்த் வாக்குகளைப் பிரித்தது போல, 2026-ல் தவெக தலைவர் விஜய் பிரித்துவிடுவார்.
தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் வராது என்ற கருத்து நிலவுகிறதே என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர்,
2006-ல் நடந்ததை மட்டும் பார்க்கக் கூடாது. அதற்கும் முன்பாக நடந்ததை பார்க்க வேண்டும்.
1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 184 தொகுதிகளை வென்று திமுக வரலாறு படைத்தது.
அப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் இதுவரை பெறவில்லை. அப்போது, திமுக ஆட்சிக்கு வராது என்று ஆருடம் கூறியவர்கள் எல்லாம், அடையாளம் தெரியாமல் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டனர்.
அப்படிப்பட்ட நிலை, மே 4 ஆம் தேதி மீண்டும் வரும். மே 4 ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்.
சென்னை கோட்டை திமுக கூட்டணிக்கே, மற்றவர்களுக்கு மனக்கோட்டை தான் என கி. வீரமணி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் திராவிடர் இயக்கத்தை உருவாக்கியவர் சர் பி.டி. தியாகராயர். வரலாற்று பெருமைமிக்க ஒரு வாழ்வை அமைத்தவர். உலகம் போற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி வந்துள்ளதற்கு அடித்தளம் போட்டவர் சர் பி.டி தியாகராயர்.
அதேபோல, இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு யாருக்கும் அடிமையாகக் கூடாது என்ற எண்ணத்தில் ஒன்று சேர்ந்துள்ள மிகப்பெரிய எழுச்சியை மக்களிடம் இன்று பார்க்க முடிகிறது என பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN