Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)
வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு மற்றும் அபாயங்களைத் தடுக்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ் (ORS) கரைசல் போதிய அளவில் இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலை அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் போன்ற வெளியில் வேலை செய்பவர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை காரணமாக ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை சமாளிக்க அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam