Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 27 ஏப்ரல் (ஹி.ச.)
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து அணியை சீராக முன்னேற்றினார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 158 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.
பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தனர்.
33 ரன்கள் எடுத்திருந்த கில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்.
பின்னர் சாய் சுதர்சனுடன் ஜோஸ் பட்லர் இணைந்து விளையாடினார். இதில் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 46 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்குத் தள்ளினார்.
இறுதியில் 16.4 ஓவர்களில் இலக்கை எட்டிய குஜராத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA