Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)
பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம், ஜேம்ஸ் வசந்தன் தனது குடும்பத்தினருடன் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார்.
உணவருந்தி திரும்பியபோது, பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி சிதறிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில்,
இது தற்செயலானதா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சமீபத்தில் விஜய் அவர்களின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்ததன் பின்னணியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக தனிநபர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் வகையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலை தளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam