Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி, 27 ஏப்ரல் (ஹி.ச.)
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்டதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தை உறுதிப்படுத்திய துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ்,
இந்த உடல்நலக்குறைவு கெட்டுப்போன உணவு அல்லது கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடை அதிகாரிகளால் மூடப்பட்டு, அங்கிருந்து உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், அப்பகுதியில் வெப்பத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA