Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 27 ஏப்ரல் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம்
மேகதாது அருகே காவேரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அருகே, தண்ணீர் குடிக்க காட்டு யானை ஒன்று வந்தது.
அப்போது திடீரென யானை ஆத்திரமடைந்து அங்கிருந்தவர்களை விரட்டத் தொடங்கியது.
இதனால் பயந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து அலறி ஓடி தப்பினர்.
அப்போது, தனியாக இருந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணி மீது யானை தாக்கியது.
இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலுக்குப் பிறகு காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அப்பகுதி வாசி ஒருவரின் கைப்பேசியில் பதிவாகியுள்ளன. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த சம்பவம் கோடிஹள்ளி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேகதாது, சங்கமம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA