கொடைக்கானலில் 2-வது நாளாக நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். தேர்தல் பிரசார பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ள அவர், தொடர்ந்து 2வது நாளாக காலை நடைபயிற்சி மேற்கொண்டார். இன்று காலை
முதல்வர்


தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார்.

தேர்தல் பிரசார பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ள அவர், தொடர்ந்து 2வது நாளாக காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.

இன்று காலை அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து வெளியே வந்து அருகிலுள்ள பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

மனோரஞ்சிதம் நீர்த்தேக்கம் உள்ளிட்ட இடங்களில் நடந்தபோது, அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன், பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

சிலர் பூங்கொத்து வழங்கியும் தனது அன்பை வெளிப்படுத்தினர்.

பொதுமக்களுடன் சிரமமின்றி உரையாடிய முதல்வர், புகைப்படம் எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

கடுமையான தேர்தல் பிரசாரத்திற்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் நிலையில், பொதுமக்களுடன் நெருக்கமாக கலந்துகொண்ட முதல்வரின் இந்த நடைபயிற்சி நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

Hindusthan Samachar / GOKILA arumugam