Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 27 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த கட்டத்தில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனால் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
கோடை வெப்பத்தை விட அதிகமாக அரசியல் சூடு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
இந்த சூழலில், தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக வேட்பாளர் பாபியா அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடி அச்சிடப்பட்ட துப்பட்டாவால் முகத்தை துடைத்ததாக கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காவல்துறையில் புகார் செய்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA