விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்ற மிஸ் கூவாகம் - முதல் 3 இடங்களை தட்டி சென்ற சென்னை திருநங்கைகள்.!
விழுப்புரம், 27 ஏப்ரல் (ஹி.ச.) விழுப்புரம் அருகே நடைபெற்ற கூவாகம் திருவிழா–2026 விழாவில், “மிஸ் திருநங்கை 2026” பட்டத்தை சென்னையை சேர்ந்த ஓமனா வென்று பெருமை சேர்த்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடல் மைதானத்தில் தேச
கூவாகம்


விழுப்புரம், 27 ஏப்ரல் (ஹி.ச.)

விழுப்புரம் அருகே நடைபெற்ற கூவாகம் திருவிழா–2026 விழாவில், “மிஸ் திருநங்கை 2026” பட்டத்தை சென்னையை சேர்ந்த ஓமனா வென்று பெருமை சேர்த்தார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடல் மைதானத்தில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பின் சென்னை நாயக்கர்கள் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவை கோலாகலமாக நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருநங்கைகள் திரளாக பங்கேற்ற இந்த விழாவில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் சாதனை படைத்த திருநங்கைகளின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து

“மிஸ் திருநங்கை 2026” அழகிப்போட்டி, வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

போட்டியின் இறுதியில், சென்னையை சேர்ந்த ஓமனா “மிஸ் திருநங்கை 2026” பட்டத்தை கைப்பற்றினார். இரண்டாம் இடத்தை சென்னையை சேர்ந்த சாய்ஸ்ரீ பெற்றார்.

மூன்றாம் இடத்தை சென்னையை சேர்ந்த சுகி பிடித்தார்.

திருநங்கைகளின் திறமைகள், சாதனைகள் மற்றும் சமூக முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா சிறப்பாக அமைந்தது. சமூக அங்கீகாரம் மற்றும் சமத்துவத்திற்கான முக்கிய நிகழ்வாகவும் இது திகழ்ந்தது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P