Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று ஏற்பட்டது.
நிலையத்தின் நுழைவுவாயிலின் மேல் தளத்தில் இருந்து சுமார் 35 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் திடீரென கீழே குதித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சி.எம்.பி.டி போலீசார், அந்த நபர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை உறுதி செய்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ