ஒரே வீடு இரண்டு நாடுகள்- இந்தியாவில் விசித்திரமான ஒரு கிராமம்!
இந்தியா, 27 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியாவின்,நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் இருக்கும் லோங்வா கிராமம்,சரியாக இந்தியா மற்றும் மியான்மர் நாட்டின் எல்லைக்கோட்டின் மீது அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் சில ஆச்சரியமான உண்மைகள்: சமையல் மியான்மரில்
வ


இந்தியா, 27 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியாவின்,நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் இருக்கும் லோங்வா கிராமம்,சரியாக இந்தியா மற்றும் மியான்மர் நாட்டின் எல்லைக்கோட்டின் மீது அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தின் சில ஆச்சரியமான உண்மைகள்:

சமையல் மியான்மரில்... தூக்கம் இந்தியாவில்: இங்குள்ள கிராமத் தலைவரின் வீடு சரியாக எல்லையைப் பிரிக்கிறது.

அவர் வீட்டில் சமையலறை மியான்மர் பகுதியிலும், படுக்கையறை இந்தியப் பகுதியிலும் இருக்கிறது.

இரட்டை குடியுரிமை:

இங்கு வாழும் 'கொன்யாக்' பழங்குடி மக்களுக்கு இந்தியா மற்றும் மியான்மர் என இரண்டு நாடுகளின் குடியுரிமையும் உள்ளது.

விசா தேவையில்லை:

எல்லைக்கோடுகள் இவர்களைப் பிரிப்பதில்லை.

இரு நாடுகளுக்குள்ளும் இவர்கள் தடையின்றி சென்று வரலாம்; இதற்கு பாஸ்போர்ட்டோ, விசாவோ தேவையில்லை.

தலை வேட்டையர்கள்:

ஒரு காலத்தில் என்று அழைக்கப்பட்ட இவர்கள், இன்று மிகச்சிறந்த கைவினைஞர்களாகவும், விவசாயிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

எல்லைகள் மனிதர்களைப் பிரித்தாலும், அன்பாலும் கலாச்சாரத்தாலும் இன்றும் ஒன்றிணைந்து வாழும் லோங்வா மக்கள் ஒரு மிகப்பெரிய அதிசயம்.

Hindusthan Samachar / Durai.J