எல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் - நிலுவைத் தொகை நாளைக்குள் செலுத்த உறுதி
தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இயக்கப்படும் 2000-க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகளுக்
டேங்கர் லாரி


தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இயக்கப்படும் 2000-க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கான ரூ.50 கோடிக்கு மேற்பட்ட வாடகைத் தொகை நிலுவையில் இருந்தது.

இந்த நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து, தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், நிலுவைத் தொகைகளை நாளைக்குள் உரிமையாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதாக நிறுவனம் உறுதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், வழக்கம்போல் டேங்கர் லாரிகளை இயக்கத் தொடங்குவதாகவும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் அறிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam