Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 ஏப்ரல் (ஹி.ச.)
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா
குறித்து பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது.
நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மாவிடம் இருந்து இனி நீதியை எதிர்பார்க்க முடியாது.
இனி நான் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகவோ, வழக்கறிஞர் வைத்து வாதிடவோ மாட்டேன்.
அதற்கு பதிலாக, மகாத்மா காந்தி அவர்களின் சத்தியாகிரக வழியை பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
எனது மனசாட்சியின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
அதே நேரத்தில், நீதிமன்றத்தில் முறையிடும் உரிமை எனக்கு உள்ளது,
என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA