Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியை சார்ந்தவர் சாந்தகுமார்.
இவர் தனது இரு சக்கர வாகனமான (Royal Enfield) என்ற வாகனத்தை தனது வீட்டிற்கு வெளியே கடந்த 17/04/2026 அன்று நேரம் சுமார் அதிகாலை 2.30. மணி அளவில் நிறுத்தி வைத்துள்ளார்.
இதை நோட்டமிட்ட மூன்று மர்ம நபர்கள், தலையில் தலை கவசம் அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தை லாக்கை உடைத்து திருடி உள்ளனர்
இந்த செயல்கள் அனைத்தும் சி. சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.
இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரான சாந்தகுமார் அவர்கள் கடந்த 17/04/2026 பூவிருந்தவல்லி T12 காவல் நிலையத்தில் குற்ற பிரிவில் புகார் அளித்து உள்ளனர்.
ஆனால் இந்த நிமிடம் வரை காவல் நிலையத்தில்
எஃப்.ஐ.ஆர்(FIR) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலும் எந்த ஓரு நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட சாந்தகுமார்,ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN