Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 27 ஏப்ரல் (ஹி.ச.)
முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.பி.க்கள் கட்சி தாவி பா.ஜனதாவில் இணைந்தனர்.
அவர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்களின் வீட்டு சுவர்களில் ‘துரோகிகள்’ என்று பெயிண்டு மூலம் எழுதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங்கிற்கு வழங்கப்பட்டிருந்த சுமார் 10 போலீசார் கொண்ட பாதுகாப்பு அணியை மாநில அரசு விலக்கிக் கொண்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அவரது வீட்டு முன்பு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA