த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிரான வேட்புமனு விவகாரம் வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச) த.வெ.க. தலைவர் விஜய் தனது வேட்புமனுவில், மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியதாக குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர
TVK Vijay


சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச)

த.வெ.க. தலைவர் விஜய் தனது வேட்புமனுவில், மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியதாக குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில்,

வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதற்கு ஒப்பானது எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், விஜய் அளித்த தகவல்கள் குறித்து சுயாதீன ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, இதே கோரிக்கையுடன் முன்பே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியது.

இதனால், புதியதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ