விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - உரிமையாளர் ஈஸ்வரி கைது
விருதுநகர், 27 ஏப்ரல் (ஹ.ச.) கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம், கட்டணார்பட்டியில் அமைந்திருந்த வனஜா பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையின் பல பகுதிகள் இடிந்து சிதறின. வெடிவிபத்தின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரம் வரை
பட்டாசு


விருதுநகர், 27 ஏப்ரல் (ஹ.ச.)

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம், கட்டணார்பட்டியில் அமைந்திருந்த வனஜா பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையின் பல பகுதிகள் இடிந்து சிதறின.

வெடிவிபத்தின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் பணியில் இருந்த 25 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாதது மற்றும் அலட்சியம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இந்த நிலையில், விபத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரி (42)யை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில்,

நேற்று இரவு ஈஸ்வரியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆலையின் நிர்வாகம், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிமம் தொடர்பான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P