தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின் தலைமையில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
திண்டுக்கல், 27 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்ப
தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின்  தலைமையில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி


திண்டுக்கல், 27 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு கண்டனர்.

அதனைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கோவில் விழாக்கள் மற்றும் தனது இல்ல விழாக்களுக்கான அழைப்பிதழ்களை வழங்கி அமைச்சரிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

அப்போது ஆத்தூர் தொகுதி மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பெரியசாமி கூறியதாவது,

தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் பெண்கள் நலனுக்கான செயல்படுத்திய திட்டங்கள் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலனுக்கான செயல்படுத்திய திட்டங்கள் தமிழகத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். கழகத்தலைவர் திராவிட மாடல் ஆட்சி நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 2.0 திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும், இது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b