புதுச்சேரியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 91.81% பேர் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் தகவல்
புதுச்சேரி, 28 ஏப்ரல் (ஹி.ச.) கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இரண்டாம் மற்
91.81% Voter Turnout Among Transgender


புதுச்சேரி, 28 ஏப்ரல் (ஹி.ச.)

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது.

இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெறவுள்ளது.

அனைத்து தேர்தல்களுக்கான முடிவுகளும் மே 4 அன்று அறிவிக்கப்படும்.

தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர்களை 'ஆண்', 'பெண்' மற்றும் 'மற்றவர்கள்' அல்லது மூன்றாம் பாலினம் என அடையாளப்படுத்துகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் பாலின வாக்காளர்களில் 91.81% பேர் வாக்களித்து நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 23 வரை பகிரப்பட்ட தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, புதுச்சேரியில் மொத்தம் 139 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களில் 91.81% பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ள நிலையில், ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் 60.49% பேர் வாக்களித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தலில் 465 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இருந்ததில் 56.79% பேர் வாக்களித்துள்ளனர்.

பிற மாநிலங்களைப் பொருத்தவரை, அசாமில் 343 மூன்றாம் பாலின வாக்காளர்களில் 36.84% பேரும், கேரளாவில் 277 வாக்காளர்களில் 57.04% பேரும் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b