திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபாடு
திருப்பதி 28 ஏப்ரல் (ஹி.ச.) இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக திருமலைக்கு வந்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்ற
A


திருப்பதி 28 ஏப்ரல் (ஹி.ச.)

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக திருமலைக்கு வந்தார்.

அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்ற துணை ஜனாதிபதி, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்குப் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதுடன், நினைவு பரிசும் அளிக்கப்பட்டது.

பின்னர், தரிசன புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்,

திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைதி மற்றும் அனைவரின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA