விஷனரி தலைவர் சந்திரபாபு நாயுடு - ஜீத் அதானி புகழாரம்
விசாகப்பட்டினம் ,28 ஏப்ரல் (ஹி.ச.) ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ) துறையில் விசாகப்பட்டினம் நகரம் முக்கிய மையமாக உருவெடுக்கிறது. நகரில் அமைக்கப்பட உள்ள 1 கிகாவாட் திறன் கொண்ட ஹைப்பர் ஸ்கேல் ஏஐ டேட்டா சென்டர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்ப
A


விசாகப்பட்டினம் ,28 ஏப்ரல் (ஹி.ச.)

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ) துறையில் விசாகப்பட்டினம் நகரம் முக்கிய மையமாக உருவெடுக்கிறது.

நகரில் அமைக்கப்பட உள்ள 1 கிகாவாட் திறன் கொண்ட ஹைப்பர் ஸ்கேல் ஏஐ டேட்டா சென்டர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதானி குழும தலைவர் ஜீத் அதானி,

இந்த திட்டம் இந்தியாவுக்கு பெரிய முன்னேற்றமாக அமையும் என்று தெரிவித்தார்.

விசாகப்பட்டினம் இனி நாட்டின் புதிய டிஜிட்டல் நுழைவாயிலாக மாறும் எனவும் அவர் கூறினார்.

இதுவரை மும்பை, சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே டேட்டா சென்டர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் விசாகப்பட்டினமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த நகரம் முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த டேட்டா சென்டர் மூலம் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கிடையிலான தகவல் தொடர்பு மேலும் வலுப்பெறும் என்றும், ஏஐ சேவைகள் விரிவாக வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

ஏஐ டேட்டா சென்டர்கள் அமைப்பதற்காக அதானி குழுமம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஜீத் அதானி தெரிவித்தார்.

பொதுமக்கள், வணிக மற்றும் தொழில் துறைகளுக்கு மேம்பட்ட ஏஐ சேவைகளை வழங்குவது இந்த முதலீட்டின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.

மேலும், மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை “விஷனரி தலைவர்” எனப் புகழ்ந்த அவர், அவரின் தலைமையில் மாநிலத்தில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் விசாகப்பட்டினம் நகரம் ஏஐ புரட்சிக்கு துவக்கமாக அமையும் என்றும் ஜீத் அதானி குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA