Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்றம் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர்கள், பின்னர் ராஜினாமா செய்யும் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் செலவை ஏற்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால், பின்னர் ஒரு தொகுதி காலியாகி அதற்கான இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது.
இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால், அந்த செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடமே வசூலிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு தொகுதிகளில் போட்டியிடுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது என்பதால், அதனை எதிர்த்து இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது பொருத்தமல்ல என்று தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற மாற்றங்கள் சட்டமன்றத்தின் மூலம் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam