வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் கைது
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில், பணிநேரத்தில் சட்டவிரோதமாக திரைப்படம் பார்த்ததாக கூறப்படும் சிசிடிவி பராமரிப்பு ஊழியர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார
ஜனநாயக


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில், பணிநேரத்தில் சட்டவிரோதமாக திரைப்படம் பார்த்ததாக கூறப்படும் சிசிடிவி பராமரிப்பு ஊழியர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் பணிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த யுவராஜ், தனது பொறுப்பை மீறி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அவர் திரைப்படம் பார்த்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, யுவராஜ் கைது செய்யப்பட்டார்.

வாக்கு எண்ணும் மையம் போன்ற மிக முக்கியமான பாதுகாப்பு மிக்க இடத்தில் இத்தகைய அலட்சியமான செயல்பாடு இடம்பெற்றது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P