மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்
தங்கம்


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,230க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,760க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.94,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P