Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேவில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லி பதிவு செய்தது.
தொடர்ந்து எந்த வீரரும் நிலைத்து நிற்காததால், டெல்லி அணி 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பெங்களூரு தரப்பில் பந்து வீச்சில் மிரட்டிய ஜோஸ் ஆசில்வுட் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டும் வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்தலிட்டி 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஜேக்கப் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய பெத்தேல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கோலியுடன் இணைந்த படிக்கால் டெல்லி பந்து வீச்சை சிதறடித்தார். ஒரு ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி ஆட்டத்தை வேகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.
இறுதியில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டிய பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. கோலி 23 ரன்களுடனும், படிக்கல் 34 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
டெல்லி தரப்பில் கைல் ஜேமிசன் 1 விக்கெட் எடுத்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA