Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி ச.)
ஐ.டி துறையில் பணியாற்றி வரும் இளம் தலைமுறையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, செந்தில்வேல் என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன மாநிலத் தலைவர் மற்றும் MD Dairy நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சு.ஆ. பொன்னுசாமி அனுப்பியுள்ள புகாரில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான காணொளியில் செந்தில்வேல், ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இவ்வகை பேச்சுகள் இளம் தலைமுறையினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, சமூக அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் உழைப்பையும் முன்னேற்றத்தையும் குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களிடையே பாகுபாடு ஏற்படுத்துதல், அவதூறு பரப்புதல் மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற காணொளிகள் தொடர்ந்து பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ