Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச)
சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குளோரி (29) தனது மகன் ரியான் (4) மற்றும் தங்கை மகன் ஜீவன் புவனேஷ் (6 மாதம்) ஆகியோருடன் சொந்த ஊரான சிவகங்கை சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
மதுரவாயல் பைபாஸ் டோல்கேட் அருகே இறங்கிய அவர்கள், அருகில் டீ குடித்த பின்னர் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது கோயம்பேட்டில் இருந்து பண்ருட்டி நோக்கி பூக்களை ஏற்றி சென்ற பொலிரோ வாகனம் திடீரென மோதியது.
இந்த விபத்தில் 4 வயது சிறுவன் ரியான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் குளோரி மற்றும் 6 மாத குழந்தை ஜீவன் புவனேஷ் இருவரும் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், குழந்தை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
உயிரிழந்த ரியான் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நெற்குன்றத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ