Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
நாட்டில் முக்கிய அடையாள ஆவணமாக பயன்படும் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் துல்லியமாக இருப்பது அவசியம்.
வங்கி கணக்கு தொடங்குதல் முதல் கல்வி சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஆதார் கட்டாயமாக கேட்கப்படுவதால், அதில் உள்ள தகவல்களில் தவறு இருந்தால் உடனடியாக திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், ஆதார் கார்டில் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதை திருத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, பிறந்த தேதி திருத்தம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
• பிறப்புச் சான்றிதழ்
• இந்திய பாஸ்போர்ட்
• அரசு சேவை புகைப்பட அடையாள அட்டை
• ஓய்வூதியர் புகைப்பட அடையாள அட்டை
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் வழங்கிய மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ்
மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கி, அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களில் அல்லது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை சரிசெய்வது பொதுமக்களின் நலனுக்காக மிகவும் முக்கியமானதாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA