புதுச்சேரி மதுபானம் 4.5 லிட்டர் விவகாரம் - தமிழக அரசு முறையீடு
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வரலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், அது குறித்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண
Pondi


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வரலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், அது குறித்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்த ஒருவருக்கு எதிரான வழக்கை, சம்பந்தப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ரத்து செய்திருந்தது.

இதில், தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவில் விளக்கம் கோரி தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது” என்று வாதிட்டார்.

இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி எம். நிர்மல்குமார், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.

இதனால், புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வருவதற்கான விதிமுறைகள் குறித்து சட்டப்பூர்வமான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ