Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல் , 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானல் வந்தார்.
அவர்கள் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தங்கியிருக்கும் 3-வது நாளான இன்று காலை சுமார் 6.45 மணி அளவில் முதல்-அமைச்சர் கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சைக்கிள் ஓட்டினார்
இதனை தொடர்ந்து, கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். இதனால் அங்கு இருந்தோர் உற்சாகம் அடைந்தனர்.
பின்னர் அவர் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார்.
முதல்-அமைச்சர் சென்ற இடங்களிலும், அவர் பயணித்த சாலைகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA