இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு - தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி!
தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச) தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு என்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட
தங்கம் தென்னரசு


தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச)

தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு என்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

எந்தத் தடைகளையும் தகர்த்து, தமிழ்நாட்டை நாட்டின் முதன்மை மாநிலமாக நிலைநிறுத்தி வருவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை, விடாமுயற்சி மற்றும் உழைப்பே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, துல்லியமான திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் காட்டி வரும் அக்கறையே, தமிழ்நாட்டை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ச்சி நாயகனான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழ்நாடு இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்ற நம்பிக்கையையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam